Posted by admin on 21-06-2026
தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா தமிழக வெற்றி கழகம் மருத்துவ அணி சார்பில் முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர பேரணி அமைச்சர் டாக்டர் டி கே பிரபு பங்கேற்பு
தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் மனநலம் குன்றிய சிறுமிக்கு சக்கர நாற்காலி வழங்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக முதலமைச்சர் விஜய் 52 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழக நிர்வாகிகளால் அவரது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அருண் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு இரு சக்கர பேரணி நடைபெற்றது. இப்பேரணியை அமைச்சர் டாக்டர் பிரபு துவங்கி வைத்து இருசக்கர வாகன பேரணியில் அமைச்சரும் பங்கேற்றார். அழகப்பா பல்கலைக் கழகத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தமிழக வெற்றிக் கழக அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது.
தமிழக வெற்றிக்கழக மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் டி கே பிரபு மனநலம் ஒன்றிய சிறுமிக்கு சக்கர நாற்காலி வழங்கினார்.
காரைக்குடி மாநகராட்சி எதிரில் இருந்து சிவகங்கை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சிலம்பாட்ட பேரணியை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு துவக்கி வைத்தார். இதில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் இந்த சிலம்பாட்ட பேரணியில் பங்கேற்றனர்
காரைக்குடி முத்துப்பட்டினம் ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தியான ஈஸ்வரர் கோயிலில் தமிழக தமிழக முதல் அமைச்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர் டி கே பிரபு தியான ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அவரே செய்தார். அதன் பின்பு ஆலயத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த ஏழை எளிய மக்களுக்கான அரிசி சிற்பம் வழங்கும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்றார்.
காரைக்குடி பர்மா காலனி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவினை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு துவக்கி வைத்தார்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.