Posted by admin on 20-05-2026
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சோழம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னம்மாள் கோவில் வீடு குடமுழுக்கு விழா நடைபெற்றது. கோயில் வீட்டில் கணபதி வழிபாட்டுடன் தொடங்கிய இந்த குடமுழுக்கு விழாவில் நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், கால பூஜைகள் போன்ற பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. கிராம மக்கள் வழிபடு நடத்திய பிறகு, சிவாச்சாரியார்கள் யாக சாலையிலிருந்து புனித நீர் கலசத்தை ஊர்வலமாக கொண்டு செல்ல, விழா குழுவினரும், கிராம மக்களும் ஊர்வலமாக சென்றனர். பின்பு வேத மந்திரங்கள் முழங்க கோவில் வீட்டில் உள்ள அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, மூலவருக்கு கலச நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கோயில் வீட்டை சுற்றிலும் கூடியிருந்த பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு மணக்குடி மாங்குடி, புதுப்பட்டி, வஞ்சனிப்பட்டி, காவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டு சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். சோழம்பட்டி கிராமத்தில் பிறந்து வெளியூரில் திருமணம் செய்துள்ள, பிறந்த வீட்டுப் பெண்கள் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து குத்து விளக்கு உள்ளிட்ட சீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ பொன்னம்மாள் கோவில் வீடு பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.