Sat, Oct 10, 2026 11:23 AM

தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை அலட்சியம் செய்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம்

Posted by admin on 22-05-2026


தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை அலட்சியம் செய்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம்

தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை அலட்சியம் செய்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உட்பட ஐந்து போலீசார் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாலி*ல் தொந்தரவு புகாரை பெற அலட்சியம் காட்டியதாக கூறப்படும் ஐந்து காவல்துறை பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க 36 வயது பெண் ஒருவர் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ ஓட்டுநர்  பாலி*ல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக கடந்த 19ஆம் தேதி தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.  அப்போது தேவகோட்டை நகர் காவல் நிலையத்திலும், அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் அவரது புகார் உடனடியாக பெறப்படாமல், 
இரு காவல் நிலையத்திலும்  மாறி மாறி செல்லுமாறு கூறி அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண், இராமநாதபுரம் சரக டிஐஜி மணிவண்ணனிடம் நேரடியாக புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் டிஐஜி உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அலட்சியம் செய்தது உறுதியானதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் 40 வயதான மாதவன் மீது தேவகோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் பாலியல் தொந்தரவு புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் செய்ததாக தேவகோட்டை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் துரைராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சீதாலட்சுமி, சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர்கள் ஜெயா மற்றும் ராஜேஸ்வரி, தனிப்பிரிவு காவலர் சந்தானம் உள்ளிட்ட ஐந்து பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார்.
பாலியல் தொந்தரவு புகாரை பெறுவதில் அலட்சியம் காட்டிய காவல்துறையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share: 5,084 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.