Posted by Admin on 05-08-2026
பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு: உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி தவெக மகளிர் அணியினர் புகார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பெண்கள் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக (தவெக) மகளிர் அணியினர் காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
காரைக்குடி முடியரசு சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மகளிர் அணியினரும், கட்சித் தொண்டர்களும் கைகளில் பதாகைகள் ஏந்தி பேரணியாக புறப்பட்டனர். பேரணியின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஆசிஷ் புனியாவிடம் புகார் மனுவை வழங்கினர். அந்த மனுவில், பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தப் பேரணி மற்றும் மனு அளிக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.