Sat, Oct 10, 2026 01:24 PM

16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு

Posted by Admin on 02-08-2026


16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டடுப்பு

16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு

 சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய் பகுதியில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர் முரளிகிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா மற்றும் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டை படித்தறிந்தனர்.

நான்கு அடி நீளமுள்ள இந்த கல்வெட்டில், “தெய்வ மாவலி வாணாதிராயர்” வழங்கிய நிலத் தர்மம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தர்மத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்ற எச்சரிக்கையும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

எழுத்து வடிவமைப்பின் அடிப்படையில், இந்த கல்வெட்டு கி.பி. 1515–1533 காலகட்டத்தில் ஆட்சி செய்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன் காலத்தைச் சேர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தெய்வ மாவலி வாணாதிராயர்” என்ற பெயரில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்வெட்டு இதுவாகும் என்பதால், இந்த கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share: 44 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.