Sat, Oct 10, 2026 01:23 PM

ஜெயங்கொண்டநிலையில் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை – கிராம மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் டி.கே. பிரபு உறுதி

Posted by Admin on 31-07-2026


ஜெயங்கொண்டநிலையில் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை – கிராம மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் டி.கே. பிரபு உறுதி

ஜெயங்கொண்டநிலையில் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை – கிராம மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் டி.கே. பிரபு உறுதி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் குவாரி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், இயற்கை மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு, ஜெயங்கொண்டநிலை கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அமைச்சர், குவாரி அமைக்க அனுமதி கோரி மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்றும், இதுவரை எந்த குவாரிக்கும் அரசால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தங்களின் இரண்டு செல்போன்கள் குவாரி தொடர்புடையவர்களிடம் இருப்பதாகவும், அவற்றை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, அமைச்சர் உடனடியாக கீழவளவு காவல் ஆய்வாளரிடம், சம்பந்தப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அமைச்சரின் உறுதியைத் தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் "அமைச்சர் வாழ்க! வாழ்க!" என்று முழக்கமிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Share: 46 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.