Sat, Oct 10, 2026 11:23 AM

பொய் வழக்கு புகார்... செல்போன் டவர் மீது ஏறி 4 மணி நேரம் போராட்டம்

Posted by admin on 19-07-2026


பொய் வழக்கு புகார்... செல்போன் டவர் மீது ஏறி 4 மணி நேரம் போராட்டம்

பொய் வழக்கு புகார்... செல்போன் டவர் மீது ஏறி 4 மணி நேரம் போராட்டம்; எம்.எல்.ஏ உறுதியால் கீழே இறங்கிய இளைஞர்கள்!


சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள மறவமங்கலத்தில், போலீசார் தங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதாக குற்றம்சாட்டி இரு இளைஞர்கள் செல்போன் டவர் மீது ஏறி 4 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பாண்டி (21) மற்றும் அகஸ்டின் (19) ஆகியோர் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய நிலையில், தகவலறிந்து போலீசார், டிஎஸ்பி லெலின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ குழந்தை இராணி நாச்சியார் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினர்.

இந்த சம்பவம் மறவமங்கலம் பகுதியில் பல மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share: 1,560 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.