Sat, Oct 10, 2026 02:19 PM

முன்விரோதம் காரணமாக அரசு பள்ளி வளாகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் கைது

Posted by admin on 16-07-2026


முன்விரோதம் காரணமாக அரசு பள்ளி வளாகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் கைது

முன்விரோதம் காரணமாக  அரசு பள்ளி வளாகத்தில்  12-ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திகுத்து சம்பவத்தில்
2 மாணவர்கள் கைது. 


சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே உள்ள மல்லல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்களுக்கிடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு மாணவர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவரை குத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானாமதுரை  சிப்காட்  போலீசார்   இச்சம்பவம் தொடர்பாக விளக்குளம் கிராமத்தை சேர்ந்த மாணவனையும் பெரியகண்ணனூர் கிராமத்தை மாணவனையும் போலீசார் கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share: 22 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.