Tue, Aug 25, 2026 03:29 PM

காளையார்கோவில் அருகே ககோலாந்தி – கூத்தணி கிராம மக்களின் 4 கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Posted by admin on 13-07-2026


காளையார்கோவில் அருகே ககோலாந்தி – கூத்தணி கிராம மக்களின் 4 கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

காளையார்கோவில் அருகே ககோலாந்தி – கூத்தணி கிராம மக்களின் 4 கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட மாரந்தை ஊராட்சியில் உள்ள கோலாந்தி மற்றும் கூத்தணி கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், கடந்த ஆறு மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் இரு கிராமங்களுக்கும் வேலை வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு பருவமழை பெய்ததால் வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்ததாகவும், ஆனால் இதுவரை கோலாந்தி மற்றும் கூத்தணி கிராமங்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பரமக்குடியில் இருந்து கோலாந்தி வழியாக சேத்தூர் செல்லும் டவுன் பஸ் கடந்த ஆறு மாதங்களாக கிராமத்திற்கு வராததால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும், இதுகுறித்தும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இரு கிராமங்களுக்கும் போதிய அளவில் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், இந்த நான்கு கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share: 12 Views

மேலும் படிக்க

சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல்முழக்க போராட்டம் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் குரல் முழக்க போராட்டம்   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்த அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து  காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து நொறுக்கிய போக்குவரத்து காவல்துறை. அரசு விதிகளை மீறி ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை – டயருக்கு அடியில் வைத்து  காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர் காரைக்குடியில் உடல் தானம்: ஜெகநாதனின் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய குடும்பத்தினர்   காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 75) உடல்நலக்குறைவால் காலமானார்.  அவரது உடல் சிவகங்கை அர
Leave a Comment

Your comment will be visible after admin approval.