Posted by admin on 11-07-2026
சிவகங்கையில் கோலாகல மாட்டுவண்டிப் பந்தயம்; 52 ஜோடிகள் பங்கேற்பு – ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலின் 72-வது பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிவகங்கை – மதுரை சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டி, பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரிய மாடு பிரிவுக்கு 8 கிலோமீட்டர், சின்ன மாடு பிரிவுக்கு 6 கிலோமீட்டர் மற்றும் பூஞ்சிட்டு பிரிவுக்கு 4 கிலோமீட்டர் தொலைவு நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
பெரிய மாடு பிரிவில் 10 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 21 ஜோடிகள், பூஞ்சிட்டு பிரிவில் 21 ஜோடிகள் என மொத்தம் 52 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் தங்கள் மாட்டுவண்டிகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கம் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன.
இதில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
மாட்டுவண்டிப் பந்தயத்தை காண சிவகங்கை – மதுரை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். உற்சாக முழக்கங்களுடன் நடைபெற்ற இந்தப் பாரம்பரிய விளையாட்டு விழா, திருவிழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.