Posted by admin on 10-07-2026
ஒரே நாளில் இரு அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது – பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பூர்வீக சொத்திற்கான பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தலையாரி கணேசனை அணுகியுள்ளார். அப்போது, பணியை செய்து தர ரூ.3,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின்படி கிராம நிர்வாக அலுவலகத்தில் ரூ.3,000 வழங்கியபோது, மறைந்திருந்த போலீசார் தலையாரி கணேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதேபோல், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. சத்யமூர்த்தியிடம், காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு செல்வேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடவடிக்கை எடுக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.5,000 பெற்ற நிலையில், தனியார் ஹோட்டலில் மீதமுள்ள ரூ.5,000 பெற்றபோது, மறைந்திருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சத்யமூர்த்தியை கைது செய்தனர்.
ஒரே நாளில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கும் வழக்கில் லஞ்சம் பெற்றதாக இரண்டு அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.