Sat, Oct 10, 2026 01:23 PM

திருப்பத்தூரில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகுப்போட்டி

Posted by admin on 08-07-2026


திருப்பத்தூரில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகுப்போட்டி

திருப்பத்தூரில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகுப் போட்டி – ஏராளமான காளைகள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சாலை அருகிலுள்ள செம்மொழி பூங்கா வளாகத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரும் கல்வி கொடையாளருமான துவார் சந்திரசேகரின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு மஞ்சுவிரட்டு காளைகளுக்கான அழகுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

பொதுவாக ஆண்கள், பெண்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமைகளை மதிப்பீடு செய்யும் வகையில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை தமிழர்களின் பாரம்பரியமும் வீர விளையாட்டாகவும் விளங்கும் மஞ்சுவிரட்டு காளைகளை மையமாகக் கொண்டு அழகுப் போட்டி நடத்தப்பட்டது என்பது சிறப்பம்சமாகும்.

இந்தப் போட்டியில் காளைகளின் திமில், கொம்பின் அமைப்பு, உடல் கட்டு, அலங்காரம், சலங்கைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் மதிப்பீட்டு அளவுகோல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மஞ்சுவிரட்டு காளைகள் போட்டியில் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சியை காண மாடுபிடி வீரர்கள், மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் திரளாகக் கலந்து கொண்டு உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.

Share: 22 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.