Posted by admin on 03-07-2026
கொல்லங்குடியில் ஜூலை 8-ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெறுகிறது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம், நாட்டரசன்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட கொல்லங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெறும் இம்முகாம், கொல்லங்குடியில் உள்ள கதிரேசன் கமலாவதி திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம்.
எனவே, கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.