Sat, Oct 10, 2026 03:05 PM

காரைக்குடியில் வாலிபர் கொலை 10 மணி நேரத்தில் குற்றவாளி பிடித்த காவல்துறையினர்

Posted by admin on 30-06-2026


காரைக்குடியில் வாலிபர் கொலை 10 மணி நேரத்தில் குற்றவாளி பிடித்த காவல்துறையினர்

காரைக்குடியில் வாலிபர் கொலை. 10 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்த காவல்துறையினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC மருத்துவமனை எதிரில்  ஆனந்தா நகர் பகுதியில்  காரைக்குடி மருதுபாண்டி நகரச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் மணிகண்டன் (வயது37 )  தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்து கொலைசெய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல்துறையினர் இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணிகண்டனை கொலை செய்த குற்றவாளி யார் என அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செல்போன் டவர் ஆகியவற்றை வைத்து தீவிரமாக தேடிய நிலையில் அதே மருதுபாண்டி நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவனுடன் மணிகண்டன் காரைக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்தியதும் அதன் பின்பு நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தில் மணிகண்டனை வீட்டிற்கு ஏற்றி வந்ததாகவும் குடிபோதையில் இருந்த மணிகண்டன்   வீட்டிற்கு வரும்பொழுது தன்னை தவறாக திட்டியதாகவும் அதனால் வண்டியை விட்டு கீழே இறங்க கூறிய பொழுது தன்னை அடிக்க முயன்றதால் நான் திருப்பித் தாக்கி கல்லை வைத்து தலையில்  அடித்ததில் மணிகண்டன் இறந்து விட்டதாக நாகராஜ் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் தற்பொழுது நாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த 10 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த வடக்கு காவல்துறையினரை காரைக்குடி ASP ஆசிஷ் புனியா பாராட்டினார்.

Share: 1,360 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.