Sat, Oct 10, 2026 12:28 PM

பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டக் கோலாகலம்

Posted by Admin on 28-06-2026


பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டக் கோலாகலம்

பாகனேரி புல்வநாயகி அம்மன் கோவில் ஆனி தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கீரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள பாகனேரியில் அமைந்துள்ள அருள்மிகு புல்வநாயகி அம்மன் கோவிலின் ஆனி மாத தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, கடந்த 20ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் அருள்மிகு புல்வநாயகி அம்மனும், சிறிய தேரில் விநாயகப் பெருமானும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். “அம்மா தாயே” என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆடி அசைந்து நகர்ந்த தேர்கள் நான்கு மாடவீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தன. தேரோட்டத்தின் போது பாகனேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்களைத் தூவி அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

 பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த தேரோட்ட விழா, கிராம மக்களின் ஒற்றுமையையும் பாரம்பரிய பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

Share: 1,093 Views

மேலும் படிக்க

நள்ளிரவில் கிடாக் கறி விருந்து ... அரிவாள் மீது சாமியாடிகள் அருள்வாக்கு நள்ளிரவில் கிடாக் கறி விருந்து ... அரிவாள் மீது சாமியாடிகள் அருள்வாக்கு நள்ளிரவில் கிடா கறி விருந்து, அருவாள்மீது நின்று சாமியாடிகள் அருள்வாக்கு சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அர பிறப்பு பதிவேட்டில் பெயர் சேர்க்காதவர்கள்  செப்டம்பர் 26-க்குள் பெயரை சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெறலாம்   மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் பிறப்பு பதிவேட்டில் பெயர் சேர்க்காதவர்கள் செப்டம்பர் 26-க்குள் பெயரை சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெறலாம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல் பிறப்பு பதிவேட்டில் பிறப்பினை பதிவு செய்து குழந்தையின் பெயரை சேர்க்காதவர்கள் பெயர் சேர்த்து பிறப்பு சான்று பெறுவது திமுகவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாக பிரிப்பு திமுகவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாக பிரிப்பு திமுகவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாக பிரிப்பு காரைக்குடி, திருப்பத்தூர் வடக்கு மாவட்டத்திலும்; சிவகங்கை, மானாமதுர
Leave a Comment

Your comment will be visible after admin approval.