Posted by Abinaya on 30-08-2026
திமுகவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாக பிரிப்பு
காரைக்குடி, திருப்பத்தூர் வடக்கு மாவட்டத்திலும்; சிவகங்கை, மானாமதுரை தெற்கு மாவட்டத்திலும் இணைப்பு
திமுகவின் கட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்ட திமுக அமைப்பு இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
புதிய நிர்வாக அமைப்பின்படி, சிவகங்கை வடக்கு மாவட்டத்தில் காரைக்குடி மற்றும் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், சிவகங்கை தெற்கு மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அமைப்பு பணிகளை எளிதாக்கி, நிர்வாக நடவடிக்கைகளை தொகுதி வாரியாக ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த மாவட்டப் பிரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாவட்ட அமைப்பைத் தொடர்ந்து, இரு மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறத.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.