Sat, Oct 10, 2026 11:22 AM

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!

Posted by Abinaya on 06-10-2026


காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பிரதாப் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி மெ.மெ. வீதியில் உள்ள RMR துணிக்கடை வாசல் பகுதியில் இன்று இரவு பிரதாப் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பிரதாப் ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து, அரிவாளால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரதாப்பை காரைக்குடி தெற்கு காவல் துறையினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆட்டோ ஓட்டுநர் பிரதாப்பை வெட்டிய மர்ம நபர்கள் யார், எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, பிரதாப்புக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் RMR துணிக்கடை வாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share: 53 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட் ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு   சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை
Leave a Comment

Your comment will be visible after admin approval.