Posted by Admin on 20-06-2026
"சர்வதேச யோகா தினத்தில் அக்வா யோகா" - நீரிலும் நிலத்திலும் யோகா செய்து கொண்டாடிய மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள்
சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்நாளில், மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி உறைவிடப் பள்ளி மற்றும் Heartfulness நிறுவனம், மும்பை தி ஸ்போர்ட்ஸ் குருகுல் நிறுவனங்கள் இணைந்து சர்வதேச யோகா தின விழாவை மிகச் சிறப்பாக நடத்தின.
இந்நிகழ்வு இறை வணக்கத்துடன் தொடங்கியது. மாணவத் தலைவி திவ்யநாயகி மற்றும் பாசறைக் குழுத் தலைவர்கள் இணைந்து இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு விருந்தினர்களை விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ஸ்போர்ட்ஸ் குருகுலின் செயல்பாட்டு மேலாளர் பிரதீப், ஸ்போர்ட்ஸ் குருகுலின் பள்ளி செயல்பாடுகளுக்கான பொறுப்பாளரும் தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் பெற்றவருமான மயங்க் சாபேகர், ஸ்போர்ட்ஸ் குருகுலின் உதவி செயல்பட்டு மேலாளர் நேகா, ஹார்ட்ஃபுல்னஸ் (Heartfulness) சிவகங்கை – இளையான்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சௌந்தரம் அம்மாள், ஹார்ட்ஃபுல்னஸ் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டி குமார், யோகா பயிற்சியாளர் காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
விருந்தினர்களை பள்ளி முதல்வர் அகிலாண்டேஸ்வரி, பள்ளி மேலாளர் தியாகராஜன், துணை முதல்வர்கள் ராஜஸ்ரீ , சகாய சாந்தி மற்றும் ஜெயப்பரியா மழலையர் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தி மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் பூங்கொத்து வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் வரவேற்று கௌரவித்தனர்.
நிகழ்ச்சியின் முதல் அம்சமாக யோகா பயிற்சிகள் நடைபெற்றன. இதில் மாணவர்களும் பெற்றோர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் காளீஸ்வரன், யோகாவின் முக்கியத்துவம், சர்வதேச யோகா தினத்தின் நோக்கம் மற்றும் யோகா செய்வதால் கிடைக்கும் உடல் மற்றும் மனநல நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். மேலும் தலை, கை, கால் மற்றும் இடுப்பு பகுதிகளுக்கான பல்வேறு யோகாசனப் பயிற்சிகளை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்.
தினமும் யோகாசனம் செய்வது உடலை ஆரோக்கியமாகவும் மனதை அமைதியாகவும் வைத்திருக்க உதவும் என்பதை வலியுறுத்திய அவர், ஒழுங்கான யோகா பயிற்சி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, ஹார்ட்ஃபுல்னஸ் பயிற்றுநர் சௌந்தரபாண்டி, யோகாவுடன் மன ஒருமைப்பாட்டை வளர்க்கும் தியானப் பயிற்சிகள், மனக் கட்டுப்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து தெளிவாக விளக்கி செயல்முறைப் பயிற்சிகளையும் வழங்கினார். இதில் பெற்றோர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினரான மயங்க் சாபேகர், தன்னை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, யோகாவின் நன்மைகள், உடல் ஆரோக்கியத்தின் அவசியம் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கு ஒழுக்கமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நீச்சல் மற்றும் அக்வா யோகா அறிமுக நிகழ்ச்சியில், நீச்சல் பயிற்சியாளர்கள் நேகா, காவியா மற்றும் விக்னேஷ் ஆகியோர் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்சிகளை வழங்கினர். நீச்சல் குளத்தில் இருந்து மயங்க் சாபேகர் மாணவர்களுடன் இணைந்து பயிற்சிகளில் பங்கேற்று வழிகாட்டினார்.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் இணைந்து நீச்சல் குளத்தில் பயிற்சிகளை அனுபவித்து மகிழ்ந்தனர். மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காக இதுபோன்ற பயனுள்ள வாய்ப்புகளை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களும், மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் யோகா தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடிய பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
காமராஜர் பிறந்த நாள் விழா
காமராஜர் பிறந்த நாள் விழா: மாணவர்களின் ஓவியங்களில் உயிர்ப்பெற்ற பெருந்தலைவர்
சிவகங்கை: பெருந்தலைவர் காமராஜரின் ப
காரைக்குடி ராமநாதன் செட்டியார் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராதிபுதூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்
2026-ஆம் ஆண்டிற்கான மாணவ
Leave a Comment
Your comment will be visible after admin approval.