Sat, Oct 10, 2026 11:22 AM

ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

Posted by Sabana on 21-09-2026


ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் அருகே ஏரியூரில் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த ஏரியூர் மருந்தீஸ்வரர் கோவில் மலைப்பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய தொல்லியல் துறை அலுவலர் முத்துக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா மற்றும் ஆய்வுக் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டபோது இந்த கல்வெட்டு அடையாளம் காணப்பட்டது.

“ஸ்வஸ்தி ஸ்ரீ” என்ற மங்களச் சொல்லுடன் தொடங்கும் கல்வெட்டில், தெலுங்கு கம்பனனின் அலுவலரான முனையத் தரையர், நல்லூர் குளத்திற்கு செல்லும் வாய்க்காலுக்கு “ஆயிரத்தைந்நூற்றுவன்” என்ற பெயரை சூட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பெயர், நடுத்தரகாலத்தில் செயல்பட்ட “திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்” எனப்படும் புகழ்பெற்ற வணிகக் குழுவை நினைவுபடுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியின் வரலாறு மற்றும் வணிகத் தொடர்புகள் குறித்த முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதாகும்.

Share: 994 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.