Sat, Oct 10, 2026 11:22 AM

திருப்புவனத்தில் இளைஞர்கள் இணைந்து இரண்டு ஏக்கரில் கோயில் மாடுகளுக்காக கோசாலை அமைப்பு

Posted by abinaya on 31-08-2026


திருப்புவனத்தில் இளைஞர்கள் இணைந்து இரண்டு ஏக்கரில் கோயில் மாடுகளுக்காக கோசாலை அமைப்பு

கோயில் மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: இளைஞர்கள் இணைந்து 2 ஏக்கரில் கோசாலை அமைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் கோயில் மாடுகளால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் பயணித்து வந்த நிலையில், அதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியாக இளைஞர்கள் ஒன்றிணைந்து 2 ஏக்கர் பரப்பளவில் கோசாலை அமைத்துள்ளனர்.

திருப்புவனம் அருகே உள்ள பாசாங்கரை கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய மாடுகள் காலப்போக்கில் 100-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையாக அதிகரித்தன. இந்த மாடுகள் நகரின் முக்கிய சாலைகள், காய்கறி சந்தை மற்றும் வணிகப் பகுதிகளில் சுற்றித்திரிந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. மேலும், மாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் வாகன விபத்துகள், பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் மற்றும் சாலையோர கடைகளுக்கு சேதம் ஏற்படும் நிலையும் உருவானது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், திருப்புவனம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் சமூக ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்தார். இதையடுத்து, "வாய்ஸ் ஆப் திருப்புவனம்" என்ற குழுவை உருவாக்கிய இளைஞர்கள், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கோசாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று முதல் கட்டமாக 22 பசு மற்றும் காளை மாடுகள் கோசாலையில் விடப்பட்டன. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மற்ற மாடுகளையும் கோசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இளைஞர்களின் இந்த சமூகப் பொறுப்புணர்வு மிக்க முயற்சி, திருப்புவனம் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Share: 29 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.