Posted by Abinaya on 30-08-2026
தேவகோட்டை அருகே 330 கிலோ குட்கா பறிமுதல் கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள்கள் கடத்தலைத் தடுக்க, தேவகோட்டை டி.எஸ்.பி கண்ணன் நேரடி மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேவகோட்டை எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் அகிலன் மாட்டின் மற்றும் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டனர், அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் ரூ. பலாயிரம் மதிப்பிலான 330 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்தது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் (41) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த தேவகோட்டை காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 330 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.