Posted by Admin on 18-08-2026
மஞ்சுவிரட்டில் காளை முட்டி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் நடைபெற்ற கோமாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு நிகழ்வில் காளை முட்டியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமாளிபட்டி கண்மாய் திடலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சக்கந்தி, பாசாங்கரை, மீனாட்சிபுரம், இடையமேலூர், மானாகுடி, உடையநாதபுரம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் காளைகளைப் பிடிக்கவும், நிகழ்வைக் காணவும் திரண்டிருந்தனர். இதில் கோயில் காளை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இடையமேலூரைச் சேர்ந்த சின்னான் மகன் கௌதம் (20) என்பவரை எதிர்பாராத விதமாக காளை முட்டியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த கௌதம் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. (சிவில்) மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.