Sat, Oct 10, 2026 01:22 PM

பில்லிங் மிஷினில் சார்ஜ் பிரச்சினை: அரசு பேருந்து கண்டக்டர்கள் அவதி

Posted by admin on 09-08-2026


பில்லிங் மிஷினில் சார்ஜ் பிரச்சினை: அரசு பேருந்து கண்டக்டர்கள் அவதி

பில்லிங் மிஷினில் சார்ஜ் பிரச்சினை: அரசு பேருந்து கண்டக்டர்கள் அவதி

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்படும் புதிய மின்னணு பில்லிங் மிஷின்களில் சார்ஜ் நீண்ட நேரம் நிற்காததால் கண்டக்டர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

2024 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நவீன பில்லிங் மிஷின்கள் மூலம் டிக்கெட் வழங்குதல், பயணிகள் விவரங்கள் கண்காணித்தல் மற்றும் க்யூஆர் கோடு மூலம் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. ஆனால், மிஷின்களின் பேட்டரி விரைவில் காலியாகிவிடுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து பேருந்துகளில் யூஎஸ்பி சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டாலும், பேருந்து பயணத்தின் போது சார்ஜர் மற்றும் மிஷின்கள் கீழே விழுந்து சேதமடைவதாகவும், சேதமடைந்தால் அதன் தொகை கண்டக்டர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கூட்டம் அதிகமாக இருக்கும் முகூர்த்தம் மற்றும் திருவிழா நாட்களில் தொடர்ச்சியாக டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுவதாக கண்டக்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே பில்லிங் மிஷின்களின் சார்ஜ் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண போக்குவரத்துத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share: 22 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.