Posted by admin on 04-08-2026
மரணத்திற்குப் பின்னும் மனிதநேயம் – மருத்துவக் கல்விக்காக உடல் தானம் செய்த 79 வயது முதியவர்
சிவகங்கை மாவட்டம் மீனாக்ஷி நகரைச் சேர்ந்த தோழர் . நா. முத்துசாமி (79) மறைவுக்குப் பின்னரும் மனிதநேயத்தின் உயரிய எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். தனது வாழ்நாளிலேயே தெரிவித்திருந்த விருப்பத்தின்படி, அவரது உடலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் மனித உடலின் அமைப்புகளை நேரடியாக அறிந்து கற்க உடல் தானங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, மறைந்த நா. முத்துசாமி விருப்பத்தை மதித்து அவரது வாரிசுகள் இந்த உயரிய மனிதநேயச் செயலை மேற்கொண்டனர்.
உடல் தானத்தை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் பெற்றுக் கொண்டதுடன், இந்த அரிய சேவையைப் பாராட்டி மருத்துவக் கல்லூரி முதல்வர் குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். மேலும், சமூகத்தில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த செயல் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு மறைந்த நா. முத்துசாமி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினரின் மனிதநேயப் பணியை பாராட்டினர்.
மரணத்திற்குப் பின்னரும் மருத்துவ மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் உடலை தானம் செய்த நா. முத்துசாமி செயல், சமூகத்தில் உடல் தானத்தின் அவசியத்தையும் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் எடுத்துரைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.