Tue, Aug 25, 2026 03:29 PM

சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

Posted by Admin on 01-08-2026


சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

*சிங்கம்புணரி ஸ்ரீராமர் ஆலயத்தில் அன்னை சீதாதேவிக்கு 108 திருவிளக்கு பூஜை பெண்கள் விரதம் இருந்து குத்து விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்*

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் 108 திருவிளக்கு பூஜை செய்தனர். நல்ல மழை வேண்டியும், நோய் நொடியில்லா வாழ்க்கை அமைய வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைத்திட வேண்டியும், குழந்தைகள் கல்வி பூரணமாக கிடைக்க வேண்டிய இந்த பூஜை செய்யப்பட்டது.

இதில் 108 திருவிளக்குகள் குங்குமத்தால் அர்ச்சித்து லலிதா சகஸ்ரநாமம், 1008 திருமந்திரம் முழங்க மகாலட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆரத்தி அன்னை சீதா தேவிக்கு காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மூலவராக அருள் பாலிக்கும் ஸ்ரீ ராமர் ஸ்ரீ சீதம்மா ஸ்ரீ லட்சுமணர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு மகாதீப ஆரத்தி காண்பிக்கப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Share: 8 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.