Tue, Aug 25, 2026 04:37 PM

அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.

Posted by admin on 24-07-2026


அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.

அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறிய சாமியாடிகள்.

*திருப்பத்தூர் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோயில் ஆடிசிறப்பு திருவிழாவில், சாமியாடிகள் அருவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினர்!*

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோயில் 28 ஆம் ஆண்டு ஆடி சிறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இரண்டாவது வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளி அன்று மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த விழா இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மாவூடியூத்து காளியம்மன் கோயிலில் சாமி ஆட்டம் நடைபெற்றது. பின்பு சின்ன கருப்பர், வெள்ளாளங்கருப்பர் சாமியாடிகள் சாமியாட்டத்துடன் கரந்த மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் குடத்தை பூசாரி தலையில் வைத்து சுமந்து அங்கிருந்து ஆண்டி முனீஸ்வரர் கோயில் வீட்டிற்கு பக்தர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். வரும் வழியில் ஆங்காங்கே சாமியாடிகள் அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறி வந்தனர். வழி நெடுகிலும் பெண்கள் வேப்பிலை மஞ்சள் கலந்த நீரை ஊற்றி வழிபாடு செய்தனர். பின்பு பூசாரி சுமந்து வந்த புனித நீர் குடம் ஆண்டிமுனிஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு கோயில் வளாகத்தில் கும்மியாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கும்மி அடித்து மகிழ்ந்தனர். காலை பால்குடம், பூத்தட்டு திருவிழா மற்றும் அன்னதான விழா நடைபெற உள்ளது.

Share: 19 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.