Sat, Oct 10, 2026 01:23 PM

மூலமாக ரூபாய் 29,505 கோடி கடன் 2026 - 27 ஆம் ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்

Posted by admin on 29-07-2026


மூலமாக ரூபாய் 29,505 கோடி கடன் 2026 - 27 ஆம் ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.    மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்

சிவகங்கை    மாவட்டம்

வங்கிகள் மூலமாக ரூ. 29,505 கோடி கடன் 
2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - 
வங்கியாளர்களுக்கான கூட்டத்தில்,  2026-27 நிதி ஆண்டுக்கான 
கடன் திட்ட அறிக்கையினை   
மாவட்ட  ஆட்சித்தலைவர்  ப.ஆகாஷ்,   வெளியிட்டு தகவல்.
*****
சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  வங்கியாளர்கள் கூட்டம்,  மாவட்ட  ஆட்சித்தலைவர்  ப.ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிவகங்கை மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 29,505 கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   

மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.20,671  கோடியும், தொழிற்துறைக்கு ரூ.1,746 கோடியும், இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ. 462 கோடியும் மற்றும் இதர துறைகளுக்கு  ரூ.6,626 கோடியும்   என ஆக  மொத்தம்  ரூ. 29,505 கோடி  கடன்  வழங்க இலக்கு வகுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்,  தெரிவித்தார்.
-2-
இந்திய ரிசர்வ் வங்கியால்,  சிவகங்கை மாவட்ட 2,935 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர்  மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் குறைந்தது 5,000 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க அறிவுறித்தியுள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் கல்விக்கடன் வழங்கும் முகாமினை நடத்த வேண்டும் என அறிவுறித்தியுள்ளார்.
மேலும், கடந்த நிதியாண்டில் (2025-26) சிவகங்கை மாவட்டமானது ரூ.27,054 கோடி கடன் வழங்க இந்திய ரிசர்வ் வங்கியால் கொடுக்கப்பட்ட இலக்கை காட்டிலும் 114% இலக்கு எட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர்                               ப.ஆகாஷ்,   வெளியிட காரைக்குடி மண்டலம்,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் சகாரேயர்  பெற்றுகொண்டார்.    

இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.பிரவின்குமார், ரிசர்வ் வங்கி தலைமை மாவட்ட பொறுப்பாளர்   வி.வி.பாபு,  நபார்ட் வங்கியின் மாவட்ட மேலாளர் அனீஷ் குமார் மற்றும் அனைத்து வங்கியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Share: 19 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.