Posted by admin on 01-07-2026
வழுக்கி விழுந்தும் ஓடிவந்து பரிசை தட்டிச் சென்ற காளை – மெய்சிலிர்த்த மாட்டுவண்டி ரசிகர்கள்!
சிவகங்கை மாவட்டம்காரைக்குடி அருகே உள்ள கழனிவாசல் ஸ்ரீ ஐயுளி அம்மன் கோவில் வைகாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரியமிக்க மாட்டு வண்டி பந்தயம் மிக விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாட்டு வண்டிகளும் இந்த பந்தயத்தில் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன.
இப்போட்டிகள் கரிச்சான் (பெரிய மாடு) மற்றும் பூஞ்சிட்டு (இளம் காளைகள்) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி ரசிகர்கள், காளைகள் எல்லை நோக்கிப் பாய்ந்து செல்வதைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.
பந்தயத்தின் ஒரு பகுதியாக, சாரதி கணேசன் என்பவர் ஓட்டி வந்த மாட்டு வண்டி எல்லையை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, மாட்டின் மீது தண்ணீர் ஊற்றியதால் வண்டியை இழுத்து வந்த ஒரு காளை திடீரென நிலைதடுமாறி வழுக்கி கீழே விழுந்தது.
இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நொடியில், அந்த வீரியமிக்க காளை சற்றும் தொய்வடையாமல், மின்னல் வேகத்தில் மீண்டும் எழுந்து நின்றது. விழுந்த அடியைப் பொருட்படுத்தாமல், முன்பை விட அதிக வேகம் சீறிப்பாய்ந்து சென்று பந்தய இலக்கைத் தட்டிச் சென்றது. நான்காவது இடத்தை பிடித்தது
கீழே விழுந்தும் மனம் தளராமல், எழுந்து ஓடி வெற்றியைப் பதிவு செய்த காளையின் இந்த அசாத்திய வீரத்தையும், மாட்டின் சுறுசுறுப்பையும் கண்ட மாட்டுவண்டி ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போயினர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.