Tue, Aug 25, 2026 05:35 PM

வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா

Posted by admin on 28-06-2026


வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா

வடவன்பட்டியில் கொடிவளைவுத் திருவிழா 

 சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடவன்பட்டியில்  கொடிவளைவுத்
திருவிழா  நடைபெற்றது.
 
                                 வடவன்பட்டி கிராமத்தில் உள்ள சந்திவீரன் கோயிலில்   விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் பூஜைகளுடன் தீபாராதனைகள் நடைபெற்றது. இந்நிலையில்  நள்ளிரவில் வடவன்பட்டி சந்திவீரன் சாமியாடி கொடிவளைவைத் தேடி கையில் அரிவாளுடன் காலில் சலங்கை கட்டி 20 கி.மீ. சென்று உடன்பட்டி கிராமக்கண்மாயில் கொடி வளைவைக் கண்டுபிடித்து சந்திவீரன் கோயில் வந்த சேர்ந்த நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலை சாமியாட்டம் நடைபெற்றது, அரண்மனை தெய்வம், சந்திவீரன், பரிவார தெய்வங்கள், சாமியாடியபடி கொடிவளைவை கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக கண்மாயில் உள்ள ஊர்க்காவலன் கோயில் ஆலமரத்தில் கட்டி விழாவைக் கொண்டாடினர்.  130 ஆண்டுகளைக் கடந்து இன்றும் பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வரும் இத்திருவிழாவின் தொடர்ச்சியாக அடுத்தவாரம் எருதுகட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் வடவன்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திரு்ந்தனர்.

Share: 1,970 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.