Sat, Oct 10, 2026 02:19 PM

தட்டட்டியில் மீன்பிடித் திருவிழா

Posted by Admin on 20-06-2026


தட்டட்டியில் மீன்பிடித் திருவிழா

தட்டட்டியில் மீன்பிடித்திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் மீன்பிடித்திருவிழா நடைபெற்றது.

                                   நாச்சியாபுரம் அருகே தட்டட்டி கிராமத்தில் உள்ள பெரியகண்மாயில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மீன்குஞ்சுகள் விடப்பட்டு வளர்ந்து வந்த நிலையில் ஊத்தா குத்துதல் மூலம் மீன்பிடித்திருவிழா நடத்துவது என கிராமத்தினர் முடிவெடுத்தனர். ஒரு ஊத்தாவிற்கு ரூ. 500 வசூல் செய்யப்பட்டு 800 பேருக்கு டோக்கன் வழங்கபட்டது. ஏலதாரர்கள் கண்மாய் கரையிலிருந்து வெள்ளைவீசி அறிவிப்பு செய்ததையடுத்து மீன்பிடி வீரர்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்பிடிக்க ஆரம்பித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால், கெளுத்தி, போன்ற நாட்டுவகை மீன்கள் ஒவ்வொருவருக்கும் 10 முதல் 20 கிலோ வரை கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். திருப்பத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, போன்ற சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் இதில் பங்கு கொண்டனர். 2 மணி நேரம் மீன்பிடிப்பிற்கு பிறகு கிராமத்தினரும் வலை, அரிகூடை, கச்சா போன்றவைகளாலும் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

Share: 1,065 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.