Posted by admin on 19-06-2026
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு,தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆர். ரமேஷ் ஏற்பாட்டில் சிவகங்கை தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள வெற்றி விநாயகர் திருக்கோயிலில் முதலமைச்சர் விஜயின் உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் தமிழக மக்களின் நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடத்தப்பட்டன.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் சுமார் 1,000 ஏழை, எளிய பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். முத்துபாரதி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் கே.வி. பரமேஸ்வரன்மற்றும் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் காளீஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மண்டல தகவல் தொழில் நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தமிழரசி, சிவகங்கை நகர கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன், காளையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, காளையார்கோவில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுனில் கவாஸ்கர், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திவாகர், சிவகங்கை ஒன்றிய நிர்வாகி அர்ஜுன், பூபதி, அகிலா, விக்னேஷ், தமிழ்மாறன், துரைப்பாண்டி, பானுமதி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர். அன்னதான நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயன்பெற்றனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.