Posted by admin on 23-05-2026
"காரைக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு திருவுருவச் சிலை அமைக்க வேண்டும்"
அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவிடம் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் ஏ.சிவசக்தி பாண்டியன் தலைமையில் சங்கத்தினர் கோரிக்கை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் டாக்டர் டி கே பிரபுவை தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள் அதன் தலைவர் ஏ. சிவசக்தி பாண்டியன் தலைமையில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள். அப்பொழுது அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தனர். அந்த கோரிக்கை பின்வருமாறு:
1. தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உரிய பிரதிநிதித்துவத்தை பெரும் வகையில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்தி அதன் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்...
2 கால்நடை வளர்ப்பு என தனி நல வாரியம் அமைத்து அதற்கு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை வாரிய தலைவராக நியமிக்க தமிழக அரசு விரைந்து ஆவன செய்ய வேண்டும்
3. முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு பீரங்கி குண்டுகளுக்கு தன் உயிரை தந்திட்ட முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு காரைக்குடி மாநகராட்சி பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் திருவுருவச் சிலை அமைத்து தர வேண்டும்...
மேற்படி கோரிக்கையை அமைச்சருக்கு சமர்ப்பிக்கின்றோம்.
அமைச்சர் அவர்கள் எங்களின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நியாயமான எங்களது கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தர ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறோம்..."
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு யாதவ மகா சபை சிவகங்கை மாவட்ட தலைவர் சிவசக்தி பாண்டியன், சுப.வீரபாண்டியன்,
ஏ.ஆர்.எஸ்.பாண்டியன்,
பழனிக்குமார் வீரமணி, இராமகிருஷ்ணன், ஆவின் பாலசுப்பிரமணியம், அருள்செல்வன், சீனிவாசன், ராஜகுரு, சுப்பையா, திருநாவுக்கரசு, முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்!
சிவகங்கை ம
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம்
காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment
Your comment will be visible after admin approval.