Sat, Oct 10, 2026 12:28 PM

தேசிய வில்வித்தைப் போட்டியில் 10 பதக்கங்களை வென்ற சிவகங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Posted by admin on 02-07-2026


தேசிய வில்வித்தைப் போட்டியில் 10 பதக்கங்களை வென்ற சிவகங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேசிய வில்வித்தை போட்டியில் அசத்திய சிவகங்கை வீரர்கள்; 10 பதக்கங்களுடன் உற்சாக வரவேற்பு

கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் சிவகங்கை மாவட்ட வீரர்கள் சிறப்பான சாதனை படைத்து, 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.

கடந்த ஜூன் 27 முதல் 29 வரை நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை குவித்ததன் மூலம் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்த வெற்றியின் மூலம், வீரர்கள் நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வில்வித்தை போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என பயிற்சியாளர் தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்று சிவகங்கை வந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊர் முக்கியஸ்தர்கள், சக வீரர்கள், பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share: 714 Views

மேலும் படிக்க

உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி இளம் வீரர் உலக சாம்பியனை வீழ்த்திய காரைக்குடி வீரர்   காரைக்குடி இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் மு.பிரனேஷ், நடப்பு உலக சதுரங மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு!" மாட்டுச் சாணம் விற்று வாழ்வாதாரம்; கேரளா வரை செல்லும் சிவகங்கை கீதாரிகளின் உழைப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை துவக்கி வைத்த கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே பிரபு காரைக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை  கனிம வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.   சிவகங்கை மாவட்ட
Leave a Comment

Your comment will be visible after admin approval.