Sat, Oct 10, 2026 01:24 PM

கிருங்காங்கோட்டையில் உடைந்து விழுந்த புதிய உயிர் மின்னழுத்த மின் கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்

Posted by Admin on 23-06-2026


கிருங்காங்கோட்டையில் உடைந்து விழுந்த புதிய உயிர் மின்னழுத்த மின் கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்

சிங்கம்புணரி அருகே கடமைக்காக ஊண்றப்பட்ட தரமில்லாத உயர் மின்னழுத்த மின்கம்பங்கள்

*உடைந்து விழுந்த புதிய உயர் மின்னழுத்த மின் கம்பங்களால் பொதுமக்கள் அச்சம்*

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டையில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர்.விவசாயிகள் கிணறுகளில் தண்ணீர் இறைக்க பயன்படுத்தும் 450க்கும் மேற்பட்ட மின் மோட்டாருக்கு அடிக்கடி குறைவான மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் நோக்கில் அரசு புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக டெண்டர் வழங்கப்பட்டு மின் கம்பங்கள் ஊண்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் லேசான காற்று வீசியதில் தரமில்லாத உயர் மின்னழுத்த மின்கம்பம் கீழக்களம் பகுதி குடியிருப்பு அருகே உடைந்து குடியிருப்பு பகுதியில் விழுந்திருந்தால் உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கும், நல்வாய்ப்பாக வயல் பகுதியில் இரண்டாக உடைந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஆழமாக மின்கம்பங்களை ஊண்றாததால் முக்கரை பிள்ளையார் வயல் பகுதியில் மின்கம்பம் சாய்ந்தது. மேலும் கிருங்காக்கோட்டை பிரான்மலை சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் உயர் மின்னழுத்த மின்கம்பி உரசிம், வல்ராங் கண்மாய் செல்லும் வழியில் வீட்டின் அருகில் வீட்டு மின் இணைப்பு மின்வயர் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் உரசி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இப்பகுதிகளில் உள்ள கண்மாய் கரைகளில் ஊண்றப்பட்ட உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் ஆழமாக ஊண்றாததாலும், மேல் பகுதியில் அரை அடியில் கடனுக்கான தரமில்லாத காண்கிரீட் கலவை போடப்பட்டதால் ஒரு மழைக்கு தாக்கு பிடிக்காமல் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்த நிலையில் உள்ளது.

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத தரமில்லாத மின்கம்பங்கள் அனைத்தையும் அகற்றி தரமுள்ள மின்கம்பங்களை ஊண்றவேண்டும் என‌ அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share: 1,548 Views

மேலும் படிக்க

காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்! சிவகங்கை ம காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து     காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேசன் இணைந்து காது, மூக்கு, தொண்டைக்கான இலவச மருத்துவ முகாம் காரைக்குடியில் குளோபல் மிஷன் மருத்துவமனை மற்றும் காரைக்குடி வெல்ஃபேர் அசோசியேஷன் இணைந்து, காது, மூக்கு, தொண்டைக்கான தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு தேவகோட்டையில் மழையால் பழமையான மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்
Leave a Comment

Your comment will be visible after admin approval.